மருந்து வகைகளின் விலை மேலும் குறைக்கப்படும் – சுகாதார அமைச்சு!

Wednesday, February 15th, 2017

கண் வில்லைகளுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து வகைகளின் விலைகள் தொடர்ந்தும் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனதரத்ன தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்காக அனுப்புமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் கண் வில்லைகளுக்கான ஒழுங்குறுத்தல்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இதன் மூலம் தற்சமயம் 30 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கண் வில்லையை எண்ணாயிரம் ரூபாவிற்கு பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கண் வில்லைகளுக்கான விலையை நிர்ணயிப்பதன் மூலம் எந்த இறக்குமதி நிறுவனத்திற்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது என்று அமைச்சர் தெரிவித்தார்.தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சீனி, உப்பு என்பன கூடுதலாக அடங்கிய உணவுகளுக்கு வரி விதிக்கும் முறைமையும் அறிமுகப்படுத்தப்படும்.

தனியார் வைத்தியசாலைகள், தனியார் மருத்துவ நிலையங்கள், ஆய்வுகூட சேவைகள என்பனவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படவிருக்கின்றன என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

e5076ff8

Related posts: