மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

மீண்டும் மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் –
புற்றுநோய், இருதய நோய் போன்ற பாரிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மருந்து வகைகளின் விலைக் குறைப்பு காரணமாக மக்கள் பெரும் நன்மையடைந்திருந்த போதிலும், ஊடகங்கள் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை. சில மருந்து வகைகளின் விலைகள் பல மடங்காக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் இந்தவிலை குறைப்புக்கான நடவடிக்கையின் மூலம் 900 கோடி ரூபா இலாபம் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|