மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சர்!

Monday, July 15th, 2019

தற்கால அரசாங்கம் அதிகாரத்திற்கு தெரிவானபோது வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றி மருந்து வகைகளின் விலை பாரியளவில் குறைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

பேராசிரியர் சேனக பிபிலே ஒளடதக் கொள்கையை வரலாற்றில் நடைமுறைப்படுத்த முடியாமல் போனமை அதற்கு எதிரான அரசியல் அழுத்தமே காரணம் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது, தாம் பல்லின நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அஞ்சப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ஹஷித சில்வா கருத்து வெளியிடுகையில், அரசாங்கம் மருந்து வகைகளின் விலைகளை குறைத்தமை காரணமாக, பொதுமக்களுக்குப் பல நன்மைகள் கிடைத்தன என்று கூறினார்.

அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக குறைந்த செலவை மேற்கொள்கின்றனர். இச் செயற்பாட்டின் காரணமாக உலக சுகாதார அமைப்பு ஆசிய வலயத்தில் இலங்கையை முன்னுதாரணப்படுத்தியுள்ளதாகவும் தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் தலைவர் மேலும் கூறினார்.

Related posts: