மருந்து வகைகளின் விலைகள் பகுப்பாய்வு நடவடிக்கை இறுதிக்கட்டத்தில்!
Wednesday, April 17th, 2019சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டுக்கு குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
அரசாங்கம் இதுவரை 73 மருந்து வகைகளின் விலைகளை ஒழுங்குறுத்தியிருக்கிறது. புற்றுநோயாளர்கள் பயன்படுத்தும் 95 சதவீதமான மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. புற்றுநோய் மருந்துகளுக்கான விலை மனுக்கோரலின் போது சமர்ப்பிக்கக் கூடிய உயர்ந்தபட்ச விலை 95 ரூபாவாகும் என்ற சுற்றுநிரூபத்தையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
மேலும் 27 மருந்து வகைகளின் விலைகளும் ஒழுங்குறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் டெங்கு குடம்பிகள்.
ஏப்ரல் 20 முதல் கல்வி நடவடிக்கை ஆரம்பம் - கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும!
சுகாதார அதிகாரிகள் சான்றிதழ் எதனையும் வழங்கவில்லை – தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது என தேர்தல்க...
|
|