மருந்து பொருட்களின் தரம் குறித்து அச்சம்  வேண்டாம்!

Friday, October 28th, 2016

அரசாங்க மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் ஒசுச​லைகள், ஒசுசல முகவர் விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் ஊடாக சந்தைப்படுத்தப்படும் மருந்துப் பொருட்களின் தரம் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி எச். எம். எம். ரூமி- நேற்றுத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அதிகம் பயன்படுத்தப்படும் 48 மருந்து பொருட்களுக்கு அரசாங்கம் விலை குறைப்பு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மக்கள் நன்மைகள் பெறுவதைத் தடுக்கும் வகையில் சிலர் பொய்களைப் பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் கீழ் 32 ஒசுச​லைகளும், 130 ஒசுசல முகவர் விற்பனை நிலையங்களும், 40 ஒசுசல விநியோகஸ்தர்களும் நாடெங்கிலும் உள்ளனர். 48 மருந்து பொருட்களுக்கு விலைக் குறைப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து அதற்கேற்ப நாம் அம்மருந்துப் பொருட்களின் விலைகளை குறைத்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளோம். வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டிலும் எமது விற்பனைக் கட்டமைப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

இருந்தும் இத்திட்டத்தின் மூலம் மக்கள் நன்மைகள் பெறுவதைத் தடுக்கும் வகையில் சிலர் பலவித பொய்களைக் கூறி வருகின்றனர். அவற்றில் எவ்வித உண்மையுமே இல்லை. விலை குறைக்கப்பட்டுள்ள 48 மருந்து பொருட்களும் எம்மிடம் போதியளவில் கையிருப்பில் உள்ளன. அத்தோடு மேலும் தேவையான அளவு மரு-ந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனரட்னவின் ஆலோசனையின் அடிப்படையில் நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். –

இருப்பினும் எமது மருந்து பொருட்களின் தரம் குறித்து சிலர் பொய்யான செய்திகளைப் பரப்புகின்றனர். அச்செய்திகளிலும் எவ்வித உண்மையும் இல்லை. நாம் தரம் மிக்க மரு-ந்து பொருட்களையே சந்தைப் படுத்தி வருகின்றோம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மருந்து பொருட்களை முதலில் அந்நாடுகளில் இருந்து தருவித்து அவற்றின் தரம் மற்றும் உள்ளடக்கம் குறித்து பரீட்சிக்கின்றோம். அதன் பின்னர் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதோடு இந்நாட்டை வந்தடைந்ததோடு மீண்டும் அவற்றைப் பரீட்சிக்கின்றோம்.

drugs