மருந்து தயாரிப்புத் துறையின் தெற்காசி மையமாக இலங்கையை தரமுயர்த்துவதே அரசாங்கத்தின் திட்டம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Wednesday, December 14th, 2016
தெற்காசியாவில் மருந்து தயாரிப்புத் துறையாக இலங்கையை தரமுயர்த்துவதே அரசாங்கத்தின் திட்டம் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் புதிய மருந்துக் கொள்கையின் கீழ் அரச ஒளடத கூட்டுத்தாபனத்துடன் இணைந்து மருந்து தயாரிப்பதற்காக 22 நிறுவனங்கள் கைச்சாத்திட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2019ம் ஆண்டளவில் நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளை உள்ளுரிலேயே தயாரிப்பது இதன் நோக்கமாகும். இந்த வேலைத்திட்டத்திற்கு அமைவாக எட்டப்பட்ட உடன்படிக்கையின் கீழ் மருந்து தயாரிப்பு தொழில்துறையில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலையை அமைச்சர் சமீபத்தில் பார்வையிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் 2018ம் ஆண்டளவில் 10 தொழிற்சாலைகள் இந்நாட்டில் மருந்து தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமென்று தெரிவித்தார். 48 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதனால் 6 மில்லியன் ரூபா சந்தை வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கு முடிந்துள்ளது. மருந்து வகைகளை உள்ளுரில் தயாரிப்பதன் மூலம் பெருந்தொகைப் பணத்தை சேமிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

மருந்து ஊசி மற்றும் 10 அத்தியாவசிய மருந்து வகைகள் இந்த தொழிற்சாலைகளில் தயாரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன. ஹொரண மில்லாவ மற்றும் கல்கஹவெல ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் தயாரிப்பு நடவடிக்கைகள் அடுத்த வருடம் மே மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மேலும் அமைச்சர் தெரிவித்தார்.

6711929d78dddba0fbd3548f1ca5a136_XL

Related posts: