மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம்!

Tuesday, October 11th, 2016

உள்நாட்டிலேயே அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்ய ரஷ்யா, இஸ்ரேல், இந்தியா உள்ளிட்ட 28 வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த 28 வெளிநாட்டு நிறுவனங்களில் ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் இரண்டு நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கையில் மருந்துப்பொருள் உற்பத்தி செய்வது குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இன்னும் ஓராண்டு காலப்பகுதியின் பின்னர் இந்த நிறுவனங்கள் மேற்கத்தைய மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக 10 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளது. இலங்கையில் மருந்துப் பொருள் உற்பத்தி செய்ய உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்காலத்தில் உற்பத்திசாலைகளை அமைக்க உள்ளன.

உற்பத்தி செய்யப்படும் மருந்துப்பொருட்கள் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட உள்ளதுடன், எஞ்சிய மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Drugs&Medicine

Related posts: