மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு!

Friday, February 8th, 2019

மருத்துவமனைகளில் பற்றாக்குறையாகக் காணப்படும் 25 வகைக்கும் மேற்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

புற்றுநோய், சிறுநீரக நோய் ஆகியவற்றுக்கான மருந்துகளை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

4 வகை மருந்துகள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் ஏனைய மருந்து வகைகளையும் விரைவாக இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: