மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – எதிர்காலத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, March 26th, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்..

இதேநேரம் முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரான எஸ்.ஆர்.ஆட்டிகலவுடன் இணைந்து இந்த விடயம் குறித்து மதிப்பீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அடுத்த ஆறு மாதங்களுக்கு 14 முக்கியமான மருந்துகள் இறக்குமதி செய்யப்படும் திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஏனைய மருந்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதால், எதிர்காலத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தமையினையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

75 வீதத்திலிருந்து 80 வீதமான மருந்துகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, அதேவேளை ஐந்து வீதம் சீனாவி லிருந்தும், மேலும் ஐந்துமுதல் 10 வீதம் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்து மிகக் குறைவான அளவில் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: