மருத்துவ உத்தியோகத்த ஆளணிப் பற்றாக்குறை – வடக்கில் தாய் – சேய் மரண வீதம் அதிகரிப்பு!

Friday, March 15th, 2019

எதிர்காலத்தில் தாய் – சேய் மரண வீதத்தையும், குடிப்பேற்று மரண வீதத்தையும் குறைப்பதன் மூலமே வடமாகாண மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியுமென வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய மட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வட மாகாணத்தின் தாய் – சேய் மரண வீதமும் குடிப்பேற்று மரண வீதமும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையை கட்டுப்படுத்த தாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

தாய் – சேய் மரண வீதம் அதிகரிப்பதற்கான காரணம் வடக்கு மாகாணத்தில், மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான ஆளணிப் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுவதாகும்.

குறித்த மரண வீதத்தை வடமாகாணத்தில் குறைப்பதன் மூலம் தேசிய மட்டத்திலும் மேற்படி மரண வீதங்களைக் குறைப்பதற்கு தங்களாலான பங்களிப்பை வழங்க முடியும் என​ குறிப்பிட்டுள்ளார்.