மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கத் தீர்மானம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, September 3rd, 2021

மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் இயலுமை உள்ளது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தொடர் இன்று இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றுவதின் முன்னேற்றம் தொடர்பிலும் 20 முதல் 29 வயது பிரிவுக்குட்பட்டவர்களுக்கு அடுத்த இரண்டு வாரத்துக்குள் முடிவுக்கு கொண்டுவருவதன் அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் நாடளாவியரீதியில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு தமது அர்பணிப்பை வழங்கிய சுகாதார தரப்பு, பாதுகாப்பு தரப்பினர் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மாநகரின் ஆட்சி அதிகாரம் எமது கரங்களுக்கு கிடைத்திருந்தால் மக்களை பாதிக்கும் செயற்பாடுகள் எதுவும் இடம...
சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – வேலணை...
புதிய அஞ்சல் நிலைய நிர்மாணத்துக்கு தனியாரின் ஒத்துழைப்பை பெற தீர்மானம் - அஞ்சல்துறை அமைச்சர் நடவடிக்...