மருத்துவ அதிகாரிகள், பொதுச் சேவை பணியாளர்களின் ஓய்வூதிய வயதெல்லை 63ஆக நீடிப்பு!

Saturday, July 10th, 2021

விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம், மருத்துவ அதிகாரிகள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொது சேவை தாதிய ஊழியர்களின் கட்டாயமாக ஓய்வு வயது வரம்பு 63 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பை பொது சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகூன் வெளியிட்டுள்ளார்.

பொது சேவையில் அனைத்து தரங்களின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து தர பொதுச் சேவை பணியாளர்களின் ஓய்வூதிய வயது 63 ஆண்டுகளாக நீடிக்கப்படுவதாக அறிவித்து அண்மையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: