மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுவது பொய் – வைத்தியர் ஏ.ரி. சுதர்ஷன!

Tuesday, August 6th, 2019

அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் புற்றுநோய்க்கான தரமற்ற மருந்துப் பொருள்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுவது உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மருந்துப்பொருள் விநியோகப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ரி. சுதர்ஷன இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துப்பொருட்களுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து மருந்து விநியோக பிரிவின் பணிப்பாளரிடம் வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts: