மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு அடுத்தவாரம்!

Thursday, October 25th, 2018

வடமாகாண மருத்துவர்களின் மேலதிக கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படுமென மருத்துவர் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் த.காண்டீபன் தெரிவித்தார்.

மருத்துவர்களின் மேலதிக கொடுப்பனவு நிதி அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பணிப்பாளர் வைத்திய கலாநிதி யு.கேதீஸ்வரனால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்களின் மேலதிக கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை மேலதிக கொடுப்பனவை வழங்குமாறு கோரி இரு தினங்களுக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பங்காளதேஷிற்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அமைப்பு!
கொரோனா சிகிச்சை விடுதிகள் நிரம்பிவிட்டது மக்கள் பொறுப்புடன் இருப்பது அவசியமென யாழ். போதனா வைத்தியசா...
சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - நாடு முழுவதும் சிறுவர் நீதிமன்றங்களை உருவாக்க துரித நடவட...