மருத்துவக் கழிவு விவகாரம்: தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணை!

Wednesday, August 14th, 2019

மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட செவனகலை ௲ சமஹிபுர வனப் பகுதியில் சுகாதார ரீதியற்ற முறையில் மருத்துமனை கழிவுகளை கொட்டிவந்த தனியார் நிறுவனம் ஒன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் தொடர்ந்தும் கொட்டப்பட்டு வந்த மருத்துவமனை கழிவுகளை அகற்றும் பணிகள் 12)ஆம் திகதி இரவுமுதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த மருத்துவமனை கழிவுகள் அரச மற்றும் தனியார் மருத்துமனைகளினூடாக வெளியேற்றப்பட்டு அது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தனியார் நிறுவனம் எந்தவொரு முறையான கட்டமைப்பையும் பேணாது குறித்த கழிவுகளை அகற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மொனராகலை – செவனகலை – சமஹிபுர பகுதியில் அரச இலட்சினைகள் பொறிக்கப்பட்ட இரத்த மாதிரிகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவமனை கழிவுகள் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

Related posts: