மருதானை பொலிஸ் அதிகாரி தற்கொலை தொடர்பில் தீவிர விசாரணை!

Monday, March 6th, 2017
மருதானை பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருதானை பொலிஸ் நிலைய பொலிஸ் சமூக நலப்பிரிவின் பொறுப்பதிகாரியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்திருக்கிறது. எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.