மரியபோல் மீது ரஷ்யப் போர்க் கப்பல்கள் வெடிகுண்டுத் தாக்குதல்!

துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷ்யப் போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அசோவ் கடல் பகுதியில் ரஷ்யப் போர் கப்பல்களின் செயற்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குறித்த பகுதியில் ஏழு ரஷ்யக் கப்பல்கள் இருக்கின்றது, கருங்கடலில் ரஷ்யா 21 கப்பல்களை நிறுத்தியிருக்கின்றது.
இதனிடையே உக்ரைனில் உள்ள ரஷ்யப் படையினர் உணவு மற்றும் எரிபொருளைப் பெறுவதில் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகவும் உறைபனி மற்றும் கடும் குளிரைச் சமாளிக்க அவர்களிடம் போதுமான உபகரணங்கள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|