மரமுந்திரிகைச் செய்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2018இல் ஆரம்பம்!

Sunday, November 19th, 2017

வடக்குமாகாணத்தில் மரமுந்திரிகைச் செய்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் என்று மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கு மாகாண விவசாயிகள் புகையிலைக்குப் பதிலாக மாற்றுப் பயிர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஓரளவு வருமானம் தரக்கூடியதாக இருக்கும் என்று மரமுந்திரிகைச் செய்கையை அறிமுகப்படுத்தியுள்ளோம். அத்துடன் செய்கையை ஊக்குவிக்கவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

புதிதாக இந்தப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் போது விவசாயிகளுக்கு அதற்கான போதிய அறிவு வேண்டும். ஆகவே முதற் கட்டமாக மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களிலும் இந்தச் செய்கையை ஊக்கப்படுத்த அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தப்படவுள்ளன. அத்துடன் இதற்கான சிறப்பு மானிய முறைகளையும் விவசாயிகளுக்கு வழங்க மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் முன்வந்துள்ளது  -என்றார்.


கடந்த மூன்று தினங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 688 சாரதிகள் கைது!
மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு?
தனியார் துறைக்கு பல்கலைக்கழகங்கள் வழங்கப்படமாட்டாது - அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல!
இலங்கை - மாலைதீவு ஜனாதிபதிகளுக்கிடையே சந்திப்பு!