மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகை தயாரிக்க திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர்!

மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகைகள் தயாரிக்கும் முறை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
2015 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை மரப்பலகை இறக்குமதி செய்வதற்காக ரூபா 41,576 மில்லியன் செலவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் 59 நாடுகளிலிருந்து இலங்கைக்கு மரப் பலகைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் செலவுகளை கட்டப்படுத்தி உள்ளூரில் இத்தொழில் துறையை ஊக்குவிக்கும் முகமாக இலங்கையில் மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகைகள் தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிராந்திய நாடுகளின் முழு ஒத்துழைப்புடன் போதைப்பொருள் வர்த்தகம் ஒழிக்கப்படும் - அமைச்சர் சாகல ரத்ந...
வன்னியின் ஆறு இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் - அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவிப்பு!
மும்மொழிகளில் இலங்கையில் புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகம்!
|
|