மரண விசாரணை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பாதுகாப்பு உடைகள் வேண்டும் – திடீர் மரண விசாரணையாளர் தொடர்பு அதிகாரி!

Wednesday, April 8th, 2020

தீடீர் மரண விசாரணையாளர்களுக்கு பாதுகாப்பு உடைகளை வழங்கப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணையாளர் தொடர்பு அதிகாரி மொகமட் பசிர் தெரிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோய் அபாயம் காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சேவையாற்றும் திடீர் மரண விசாரணையாளர்களுக்கு பாதுகாப்பு  உடையினை  வழங்க அரசாங்கம் முன்வர வேண்டுமென  திடீர்மரண விசாரனையாளர்கள் சங்கத்தின் தொடர்பு அதிகாரி  மொகட் பசிர் தெரிவித்துள்ளார்

ஹட்டனனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஜனாதிபதியும் சுகாதார பிரிவினரும் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

அவர்களோடு திடீர் மரண விசாரணை அதிகாரிகளும் இணைந்து செயற்படுகின்றோம் இந் நிலையில் திடீர் மரணம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் களத்திற்கு சென்று கடமையை செய்யும் போது கொரோனா தொற்று அபாயத்திற்கு உள்ளாகின்றோம் ஆகவே மலையக பெருந்தோட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு உடைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

Related posts: