மரண தண்டனை வேண்டும் – கருத்துக்கணிப்பில் யாழ். மக்கள்!

Wednesday, September 11th, 2019

யாழ்ப்பாணத்தில் மரண தண்டனை தொடர்பான கருத்துக்கணிப்பில் 94 சதவீதமானோர் ஆதரவு வழங்கியுள்ளது.

யாழ். கோட்டை முற்றவெளியில் இடம்பெற்றுவரும் என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா கண்காட்சியில், அந்த விடயம் தெரியவந்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா இல்லையா என மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 93.77 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.இந்த கண்காட்சி இடம்பெறும் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலக அலுவலக கூடத்தில் இக்கருத்துக்கணிப்பு இடம்பெற்று வருகின்றது.

இதற்கான பதிலை Touch Screen பயன்படுத்தி வழங்குவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து 6.23 சதவீதமானோர் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 43 வருடங்களில் முதல்முறையாக போதைப் பொருள் தொடர்பான குற்றம் சுமத்தப்பட்டவர்களை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.அவரது இந்த அறிவித்ததை அடுத்து அரசியல் காட்சிகள் சிவில் அமைப்புக்கள் ஐக்கிய நடுகள் சபை மற்றும் சர்வதேசமும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கோட்டாபயவை தோல்வியடையச் செய்ய முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன!
பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – துறைசார் இராஜாங்க அமைச்சு அற...
இலங்கையில் சமூக பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதியின் 25 வருட...