மரண தண்டனை பட்டியலில் முதலாவதாக இருப்பது பெண் ?

Sunday, June 30th, 2019

நான்கு பேர் கொண்ட மரண தண்டனை பட்டியலில் முதலாவதாக இருப்பது பெண் என தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த ஷியாமலி பெரேரா என்பவரின் பெயரே முதலிடத்தில் உள்ளது. அவருக்கு 2011 ஆம் மார்ச் மாதம் முதலாம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளின் 54வது சரத்தின் படி இலங்கையில் பெண் ஒருவருக்கு இதுவரையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதில்லை. சிறைச்சாலை வரலாற்றில் பெண்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை ஆயுள் தண்டனையாகும்.

சீ.தர்மாகரன் என்பவர் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கு 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டியலுக்கமைய என்.ஜே.எம்.இஸ்தார் மற்றும் பீ.ஜீ.போலிசிங் என்பவர்கள் மூன்றாம் நான்காம் இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு 2007ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: