மரண தண்டனையை நீக்கும் முன்மொழிவு சட்டபூர்வமானதல்ல – ஜனாதிபதி!

Tuesday, August 6th, 2019

கம்பஹா மாவட்டத்திலுள்ள பெறுமதியான வளமான முத்துராஜவெல சூழலை அழிவுக்குள்ளாக்குவதில் தற்போதைய அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக இந்த பாரிய சுற்றாடல் அழிவை தவிர்க்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்று திவுலபிட்டிய பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” கம்பஹா மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நீக்கும் முன்மொழிவு சட்டபூர்வமானதல்ல என்று சட்டமா அதிபரினால் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

போதைப்பொருளுக்கெதிரான போராட்டத்திற்கு எதிராக எழும் குரல்களின்மூலம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றவர்கள் நாட்டின் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளுமாவர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள ஒருபோதும் இடமளிக்க கூடாதென்றும் தெரிவித்தார்.

Related posts: