மரண தண்டனையை தற்காலிகமாக இடைநிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

Friday, July 5th, 2019

இலங்கையில் மரண தண்டனையை அமுல்ப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் 30ம் திகதி வரை இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Related posts: