மரண தண்டனைக்கு சர்வதேச மன்னிப்பு சபை மீண்டும் எதிர்ப்பு!

Saturday, February 23rd, 2019

நாட்டில் மரண தண்டனை மீள அமுலாக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்பு சபை மீண்டும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அதன் பொதுசெயலாளர் குமி நைடோ இதுதொடர்பில் ஜனாதிபதிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அமுலாக்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த தீர்மானத்துக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை இணையத்தளம் மூலம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

Related posts: