மரணத்தின் பின்னரான PCR பரிசோதனைகள் அவசியமற்றது – புதிய சுற்றறிக்கையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022

மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் இனி கட்டாயமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வீட்டிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ உயிரிழப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் கட்டாயமில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நபரொருவரின் பிரேத பரிசோதனையின் போது சம்பந்தப்பட்ட சட்டவைத்திய அதிகாரியின் விருப்பத்தின் பேரில் மட்டுமே பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: