மரணங்களின் போது மாநகரின் சிற்றூழிர்களுக்கு சிறப்பு இழப்பீடு வழங்க திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகர உறுப்பினர் றீகன்!

Friday, December 7th, 2018

போதைப் பொருட்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் எமது பிரதேச இளைஞர்களை அதன் பிடியிலிருந்து விடுவித்து சமூகத்தில் நற்பிரயைகளாக உருவாக்க இந்த பாதீட்டில் முன்மொழிவுகள் உள்வாங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர முதல்வர் றீகன் வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர் பயிற்றுவிப்புக்காக மந்த போசணை மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களை கொண்டதான ஒதுக்கீடுகளைக் கொண்டு  தவறான வழிகளில் செல்லும் எமது இளைஞர்களை சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன் மாநகரின் தொழிலாழிகள் இறப்பின் போது அவர்களுக்கான இறப்புக்கான ஒரு நிதி ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

Related posts: