மரக்கறி வகைகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை – அரசாங்கம்!

Saturday, April 11th, 2020

மரக்கறி வகைகளை அரசாங்கம் கொள்முதல் செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுயள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மரக்கறி உற்பத்தியாளர்களின் விளைச்சல்களையும் மொத்த அடிப்படையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார மத்திய நிலையங்கள் பல ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களின் ஊடாக இந்த மரக்கறி வகைகள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ள பகுதியில் நேற்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: