மரக்கறிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கருத்து!

Thursday, December 19th, 2019

ஜனவரி மாதம் வரை சந்தையில் காய்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்து காணப்படும் என மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் பெய்த கடும் மழைக் காரணமாக பயிர்செய்கைகள் அழிவடைந்தமையின் காரணமாக சந்தைக்கு வரும் மரக்கறிகளின் அளவு குறைவடைந்தமை இதற்கு காரணமாகும்.

இந்த நிலையில் சந்தையில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்து காணப்படுவதாக நுகர்வோர் அங்களாய்கின்றனர்.

புறக்கோட்டை, மீகொட, தம்புள்ளை, நுவரெலியா, வெலிமடை, மாத்தறை ஆகிய பகுதிகளில் தற்போது மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.

இதற்கமைய கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் 200 – 220 ரூபாவாக இருந்த கரட் ஒரு கிலோவின் சில்லறை விலை 390 – 410 ரூபாவாக காணப்படுகின்றது.

அதேபோல் போஞ்சி ஒரு கிலோ 200 – 240 இருந்த நிலையில் தற்போது அதன் சில்லறை விலை 390 – 410 ரூபா வரை அதிகரித்துள்ளது.

மேலும் கோவா ஒரு கிலோ 150 – 170 ரூபா வரையான சில்லறை விலைக்கு விற்கப்பட்டதுடன், தற்போது அதன் விலை 150 – 170 ரூபா வரை அதிகரித்துள்ளது.

அத்துடன் மூன்று வாரங்களுக்கு முன்னர் 180 – 200 ரூபாவாக காணப்பட்ட உருளைகிழங்கு ஒரு கிலோவின் விலை தற்போது 240 – 280 என்ற சில்லறை விலைக்கு விற்கப்படுகின்றது.

அதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் 140 ரூபாவாக காணப்பட்ட பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை தற்போது 240 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்தார்.

Related posts: