மயிலிட்டி துறைமுகத்தில் தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கும் கப்பல்!

Monday, June 18th, 2018

மயிலிட்டி துறைமுகத்தில் அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீப் பற்றிக்கொண்டுள்ளது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் தீப்பற்றிய கப்பலின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர  கடற்படையின் தீ அணைக்கும் பிரிவினர் முயற்சிக்கின்ற போதும் கப்பலின் இயந்திரப் பகுதி கடுமையாக தீ பற்றியதால் அங்கு டீசல் தாங்கி உள்ளதால் தீ தொடர்ந்து எரிகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பல் வெடிக்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருத்த வேலை காரணமாக கடந்த ஒரு வருடமாக குறித்த கப்பல் அந்தப் பகுதியில் நங்கூரம் இடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: