மயிலிட்டி ஆலயங்களில் ஞாயிறன்று  விசேட பூஜைகள் !

Tuesday, June 14th, 2016

உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வீர மாணிக்கத் தேவன் துறை ஸ்ரீ கண்ணகா தேவி, முருகன், குளத்தடி அம்மன் ஆலயங்களில்  எதிர்வரும்-19 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜைகள் இடம்பெறவுள்ளன.
வழமை  போன்று பாதுகாப்புப் படையினரின் அனுமதி பெற்று இந்த விசேட பூஜைகள் நடாத்தப்படவுள்ளதால் சகல அடியவர்களையும் ஞாயிற்றுக் கிழமை காலை-7 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் ஒன்று கூடுமாறு ஆலய நிர்வாக சபையினர் கேட்டுள்ளனர். பருத்தித் துறையிலிருந்து வருகை தரும் பக்தர்களின் வசதி கருதி போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts: