மன உளைச்சலே பெறுபேற்று வீழ்ச்சிக்கு காரணம் – இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஸ்டாலின் தெரிவிப்பு!

Wednesday, April 11th, 2018

ஆசரியர்களின் மன உழசை;சலும் மாணவர்களின் பெறுபேறுகளின் வீழ்ச்சிக்கு ஒருவிதத்தில் காரணமாகும். வடக்கு மாகாண ஆசிரியர்கள் தற்போது அறிமுகமாகியுள்ள பிங்கர் பிறின்ட் கையொப்ப முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதி இருப்பின் ஆசிரியர்கள் எந்தவித மன உளைச்சலுமின்றி மாணவர்களுக்கு பாடங்களை நேர்த்தியாகக் கற்றுத்தர முடியும்.

இவ்வாறு தெரிவித்தார். இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் யோசப் ஸ்டாலின்.

வெளியாகியுள்ள ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 9 ஆவது இடத்தில்தான் உள்ளது. கடந்த வருடமும் 9 ஆவது இடத்தில்தான் இருந்தது. எனினும் இந்த வருடப் பெறுபேறுகள் கடந்த வருட பெறுபேறுகளிலிருந்து அதிகமாகவே உள்ளன. வடமாகாணம் தொடர்ந்தும் 9 ஆவது இடத்தில் இருப்பதற்குக் காரணம் தொடர்பில் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

பெறுபேறுகளால் மட்டும் கல்வி அபிவிருத்தி அடைகின்றது எனக் கூறிவிட முடியாது. ஆனாலும் கல்வி அபிவிருத்திக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக பெறுபேறும் காணப்படுகின்றது.

கல்வி அபிவிருத்திக்கு உயர் பெறுபேற்றுக்குச் சமமான திட்டங்களும் முறையான நடைமுறைகளும் கல்வியில் காணப்பட வேண்டும்.

வடக்கில் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை உட்பட கல்வித்துறையில் உள்ள அதிகாரிகளின் கவனவீனம்., முறையற்ற செயற்றிட்டங்கள், செயற்பாடுகள், நியமனங்கள் சரியான முறையில் அமையாமை என்பன காணப்படுகின்றன. பிங்கர் பிறின்ட் முறையும் ஆசிரியர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது.

வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து வசதிகளற்ற கீழ்மட்ட பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதிகளான போக்குவரத்து, தங்குமிடம் போன்றன இல்லாத பட்சத்தில் அவர்களுடைய வருகை தாமதமாக இருக்கும். இந்த நேரத்தில் கையொப்பமிடுதல் போன்றவற்றால் கற்பித்தல் செயற்பாடுகளில் மன உளைச்சலுடனேயே ஈடுபட வேண்டி வரும். எனவே உரிய முறையில் கற்பித்தல் இடம்பெறாது.

மேலும் கல்வித்துறையில் காணப்படும் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு ஊழல்கள் நிறுத்தப்பட்டு வடக்குக்கு உரிய கல்விமுறை திட்டமிடப்படும் சந்தர்ப்பத்திலேயே சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்றார்.

Related posts: