மன்னிப்பு கோரிய சீனப் பெண் !

Thursday, February 6th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட சீன பெண் இலங்கையர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

we chat எனும் தொழில்நுட்பத்தின் ஊடாக ஊடாக மன்னிப்பு கோரியுள்ளார். தன்னால் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட சிரமம் தொடர்பில் மன்னிப்பு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் முதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அனைவரும் என்னை கண்டு அச்சமடைந்தார்கள். பலர் பதற்றமடைந்தார்கள். இந்த நோய் தொற்றியது எனக்கு தெரியாது.

இதனால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட சிரமம் குறித்து நான் மன்னிப்பு கோருகின்றேன். நான் இந்த தொற்றுக்குள்ளானேன் என்பதனை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை.

நான் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே வுஹான் சென்றேன். பின்னரே இலங்கை வந்தேன். அதன் பின்னர் இரவில் எனக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டது. இதனால் இங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். நான் வைத்தியசாலை அறையில் அழுதுக் கொண்டே இருந்தேன். அங்கு ஒரு பிரதான தாதி என்னை சமாதானப்படுத்தினார்.

எனக்கு தேவையான அனைத்தையும் கொண்டு வந்து தந்தார். வைத்தியர்கள் தினமும் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். அதே போது சுற்றுலா துறையின் முன்னாள் பிரதிநிதி ஒருவரும் இணையத்தளம் ஊடாக தொடர்புக் கொண்டு என்னை தேடி பார்த்தார்.

எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிந்த சமயத்தில் மிகவும் சிரமமடைந்தேன். முதலாவது சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. மூன்றாவது நாள் கொரோனா இருப்பது உறுதியானது.

எனது பிரதான வைத்திய அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள். சில நாட்களில் பின்னர் என்னால் வீட்டிற்கு செல்ல முடியும் என அவர்கள் கூறினார்கள். என்னுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: