மன்னார் – மடு அன்னையின் ஆவணித் திருவிழா ஆரம்பம் – 5 இட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!
Tuesday, August 15th, 2023மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.
மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறுகிறது.
இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கின்றனர்.
இந்த திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மடு திருத்தலத்திற்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...
மனித பாவனைக்கு ஏற்ற அரிசியில் விலங்குகளுக்கு தீவன உற்பத்தி - அதிகாரிகள் சுற்றிவளைப்பு!
நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை இயக்குவதற்கு நடவடிக்கை !
|
|