மன்னார் கடலில் மீட்கப்பட்ட யாழ் யுவதியின் சடலம் கொலையா? தற்கொலையா? என பொலிசார் தீவிர விசாரணை!

மன்னார் – கோந்தைபிட்டி கடற்கரை பகுதியில் நேற்றைய தினம்(13) காலை சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த யுவதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் 22 வயதுடைய கீர்த்தனா எனத் தெரியவந்துள்ளது.
அவர் மன்னார் மூன்றாம் பிட்டி பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வந்துள்ளார்.
இதேவேளை இவர் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றிய நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
யுவதியின் தந்தை சிறு வயதிலே மரணித்த நிலையில், தாயின் பராமரிப்பில் குறித்த யுவதி மற்றும் இரு சகோதரர்கள் இருந்துள்ளனர்.
தாய் பல்வேறு கூலி தொழில் ஈடுபட்டுக் கிடைத்த வருமானத்திலே மூவரையும் பராமரித்து வந்துள்ளார்.
யுவதி உறவினர் ஒருவருடன் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (11) பணி முடிவடைந்த பின்னர் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்றுள்ளார்.
அதன் போது தனது ஆண் நண்பர் ஒருவருடன் சந்திப்பை மேற்கொண்ட காணொளி வெளியாகியிருந்தது. இந்நிலையிலேரயே குறித்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|