மன்னார் கடலில் கரையொதுங்கிய ‘கடற்பன்றி’ – பிரேத பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்க ஏற்பாடு!

தலைமன்னார் பிரதான வீதி ஆதாம் பாலத்திற்கு உற்பட்ட தேசிய வனப் பூங்கா கரையோரப் பகுதியில் ‘கடற்பன்றி’ என பெயருடைய பாரிய மீன் சடலமாக கரையொதுங்கியுள்ளது..
இதனை அவதானித்த கடற்கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர், குறித்த பகுதி வன ஜீவராசிகள் தினைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சென்று பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதனடிப்படையில் குறித்த மீனின் ஒரு பகுதி உணவுக்காக வேட்டையாடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கடற்பன்றி இனமானது தற்போது அருகிவரும் பாலூட்டி மீன் இனத்தைச் சேர்ந்தது என்பதுடன், கரையொதுங்கிய கடற்பன்றி 3.3 மீற்றர் நீளமானதும் சுமார் 700 கிலோ கிராம் எடையும் கொண்டதென தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடற்பன்றியின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|