மன்னாரில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் !

மன்னாரில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 522 ஆக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவிக்கையில் “இந்த வருடத்தில் இதுவரை 505 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளராக மன்னாரில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் இந்த மாதம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 15 பேர், வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
வாக்காளர் பதிவேட்டில் திருத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்!
இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் துரிதகதியில் அபிவிருத்தி - அமைச்சர் பிரசன்ன ...
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிச் சென்றால் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்துங்கள் - பிரதி பொலிஸ் மா அதிப...
|
|