மனுஸ் தீவில் உயிரிழந்த அமரர் ரஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்த சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சாவகச்சேரி அல்லாரை தம்புதோட்டத்தில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அன்னாரின் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
முன்பதாக அவுஸ்திரேலிய மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காலமான ரஜீவ் அவர்களது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியின் செயலாளருடனும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடி மேற்கொண்டுள்ளார்.
இதன் பிரகாரம் மேற்படி இளைஞரின் சடலம் கட்டுநாயக்க விமான நிலையமூடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|