மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் அரசாங்கம் அறிக்கையை சமர்ப்பிக்கும்!

Wednesday, February 15th, 2017

அமெரிக்காவின் அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனையில் அடங்கிய பரிந்துரைகளை செயற்படுத்த சமகால அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 34 வது கூட்டத் தொடரில் இலங்கை சமர்ப்பிக்கவுள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை சார்பில் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 34 வது கூட்டத் தொடரில் இலங்கை மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் கடந்தகால கூட்டத் தொடர்களில் இலங்கை சம்பந்தமாக யோசனைகள் முன்வைக்கப்படுவது, மனித உரிமைகள் பற்றி கலந்துரையாடுவது போன்றன நடந்திருந்தாலும் இம்முறை அவ்வாறான எதுவும் நடக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

MS-UNHRC-1

Related posts: