மனித உரிமைகள் தொடர்பிலான விவாதங்கங்கள் அரசியல் காரணங்களுக்கானதாக அமைந்துவிடக் கூடாது – ஐ.நாவிடம் சீனா மீண்டும் வலியுறுத்து!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சீனா கருத்துக்களை மீண்டும் வெளியிட்டுள்ளது.
இணை கருத்துக்களை கொண்ட நாடுகளின் குழு சார்பில் உரையாற்றியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான சீன தூதுவர் சென் சூ இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பெயரை குறிப்பிடாவிடினும், மனித உரிமைகள் பேரவை, அரசியல் மயமாவது தொடர்பில் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பில் பயனுள்ள விவாதங்கங்கள் இருக்க வேண்டும் எனவும் அரசியல் காரணங்களுக்காக அது அமைந்து விடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நடவடிக்கையானது, அந்த நாடுகளின் உள்விவகாரங்களில்
தலையிடும் செயற்பாடுக்கு ஒப்பானது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான சீன தூதுவர் சென் சூ குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|