மனித உடலில் உணரப்படக் கூடிய எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
Saturday, March 2nd, 2024நாட்டின் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படக் கூடிய எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அதிக வெப்பமான வானிலை நிலவக் கூடும்.
இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பநிலை கட்டுநாயக்க பகுதியில் உணரப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு 35.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இஸ்லாமிய புதுவருடத்தை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று!
சட்டவிரோத கூரிய ஆயுதங்கள் ஒப்படைக்கும் கால அவகாசம் நீடிப்பு!
ஆறுதல் தருகின்ற புதுவருடமாக இந்த புத்தாண்டு மலரட்டும் - புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி தெரி...
|
|