மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் – பொதுமக்களுக்கு தொல்பொருள் திணைக்களம் அறிவுறுத்து!

Monday, March 6th, 2023

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது.

அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டுள்ளன. இதனால் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: