மந்திகை ஆதார மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை கிளினிக் ஆரம்பம்!

Thursday, March 8th, 2018

மந்திகை ஆதார மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை கிளினிக் ஆரம்பமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலில் வாரத்தில் மூன்று நாள்கள் நடத்தப்படவுள்ளன.

வாரத்தில் பிரதி சனிக்கிழமைகளில் முன்பள்ளிச் சிறார்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கும் செவ்வாய், புதன்கிழமைகளில் ஏனையோருக்கும் கிளினிக் நடத்தப்படுமெனவும் புதன்கிழமைகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவ நிபுணர் சிகிச்சையளிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வல்வெட்டித்துறை, அச்சுவேலி, வரணி ஆகிய பிரதேச மருத்துவமனைகளையும் இணைத்து இந்தக் கிளினிக் நடத்தப்படவுள்ளதெனவும் விரைவில் இந்த மருத்துவமனைகளில் உப கிளினிக்குகள் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் வடமராட்சி பிரதேச மக்கள் காது, மூக்கு, தொண்டை கிளினிக்குக்காகவும் அரச பணியாளர்கள் மருத்துவ அறிக்கை பெறுவதற்காகவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குச் சென்று வந்தனர் எனவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக மந்திகை மருத்துவமனையில் முதன்முறையாக காது, மூக்கு, தொண்டை கிளினிக் ஆரம்பிக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: