மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான ஜனாதிபதியின் நடவடிக்கை!

நாட்டில் ஏற்படும் மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக உரிய சட்டத்தை அமுல்படுத்துவதுடன், அதனை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக அனைத்து மத தலைவர்களும் ஒரே அரங்குக்கு வர வேண்டும் எனவும் நாட்டில் ஒற்றுமையின்மையை விதைக்கும் இன, மத முரண்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாதெனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்படும் மத முரண்பாடுகள் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதற்காக ஆலோசனைக்கமைய அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களை உள்ளடக்கிய குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழுவை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்த வேண்டியதன் முக்கியத்தவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.
Related posts:
|
|