மத்திய வங்கி  மோசடி விவகாரம் தொடர்பான  அறிக்கைக்கு பிரதமர் பணிப்பு!

Thursday, October 13th, 2016

மத்திய வங்கி முறிகள் விநியோக விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் குறித்த நிறுவனம் தொடர்பிலான முழுமையான அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகால நிதி கொடுக்கல் வாங்கல் உள்ளடங்கலான முழுமையான அறிக்கையை விரைவில் முன்வைக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இன்று வியாழக்கிழமை பிரதமர் உத்தரவிட்டுள்ளார்மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனின் மருமகனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு எதிராக தற்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பிணை முறிகள் மோசடி விவகாரத்திற்கும் குறித்த நிறுவனத்தின் அதீத வருமானத்திற்கும் இடையில் தொடர்புகள் காணப்படுவதாக சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டன

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த நிறுவனம் தொடர்பிலும் கடந்த ஐந்தாண்டுகால வருமானம் தொடர்பாகவும் முழுமையான அறிக்கையை கோரியுள்ளார்

Arjuna-Mahendran-and-Ranil-Wicremesinghe-640x400

Related posts: