மத்திய வங்கி மோசடி விவகாரம் – மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபர் வேண்டுகோள்!

Friday, February 12th, 2021

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றுள்ள மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 11 பேர் மீது பிணை முறி மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கை விசாரிப்பதற்கென மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பிரதம நீதியரசருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் போதியளவு விசாரணைகளை நடத்தி தமக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: