மத்திய வங்கி தொடரபாக மீண்டும் முறைப்பாடு!

Saturday, August 20th, 2016

மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு அதிகளவில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

2015ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு மிகவும் பெரியளவில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர். நிதி மோசடி விசாரணைப் பிரிவிடமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

மத்திய வங்கி வரலாற்றில் மட்டுமன்றி இலங்கை அரச சேவை வரலாற்றிலும் இந்தளவு தொகை சம்பளம் உயர்த்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர்களின் சம்பளங்கள் 110 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 267000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துணை ஆணையாளர்களின் அடிப்படைச் சம்பளம் 107 வீதத்தினால் அதாவது 193000 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் சிற்றூழியர்களது சம்பளம் 81000 எனவும் இது அரசாங்க மருத்துவர் ஒருவரின் சம்பளத்தை விடவும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கி சில ஆண்டுகளாக நட்டமடைந்து வரும் நிலையில் இவ்வளவு பாரியளவு தொகை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடமும், நிதி மோசடி விசாரணைப் பிரிவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றி ஓய்வு பெற்றுக்கொண்ட டபிள்யு.டி.ஏ.ஈ வீரசிங்க மற்றும் ஏ.ஜீ.ரத்னவீர ஆகியோரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: