மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

கொவிட் 19 தொற்று பரவலுடன் உருவாகியுள்ள பொருளாதார நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகளை சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார் குறித்த சந்திப்பு நேற்றையதினம் .இடம்பெற்றுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர், பிரதி ஆளுநர்கள், வங்கி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு பொறுப்பான உதவி ஆளுநர் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பணிப்பாளர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் நிதி திரவத்தன்மையை பேணுதல் மற்றும் நிதி வசதிகளுக்கான ஏற்பாடுகள் குறித்த வழிநடத்தல் முகாமைத்துவத்திற்காக இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது.
அந்நியச் செலாவணி வரவு செலவுத்திட்டம் மற்றும் வெளி கையிருப்பு முகாமைத்துவத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, இலங்கையின் பிணைமுறிகளில் முதலீடு செய்வோரிடம் அதிகபட்ச நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கி அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.
அனைத்து வங்கிகளையும் திறந்து வைக்குமாறு மத்திய வங்கிக்கு அறிவித்த ஜனாதிபதி, கொவிட் 19 பிரச்சினைக்கு பின்னரான காலத்திற்குறிய பொருளாதார மூலோபாயங்களை வகுக்குமாறும் பணிப்புரை வழங்கினார். குறித்த சந்திப்பில் திறைசேறி செயலாளரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|