மத்திய வங்கியின் 71 ஆவது வருடாந்த அறிக்கை பிரதமர் மஹிந்தவிடம் கையளிப்பு!

Friday, April 30th, 2021

இலங்கை மத்திய வங்கியின் 71 ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ். டீ. லக்ஷ்மன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

அலரிமாளிகையில் வைத்து இன்றையதினம் குறித்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாணய விதிச் சட்டத்திற்கமைய மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, ஆண்டுதோறும் ஏப்ரல் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நிதி அமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட வேண்டும். அதற்கமைய மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டில் இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் அரச கொள்கை கட்டமைப்பிற்குள் இலங்கை பொருளாதாரத்தின் போக்கு குறித்த கணிப்பும் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: