மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம் !

Saturday, November 30th, 2019

இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டமான 7.00 வீதத்திலும் 8.00 வீதத்திலும் தொடர்ந்தும் பேணுவதன் மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையினைப் பேணுவதற்குத் தீர்மானித்திருக்கிறது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் நேற்றைய கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆராய்ந்ததனைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாணயச் சபையின் தீர்மானமானது, பணவீக்கத்தினை விரும்பத்தக்க மட்டமான 4-6 வீத வீச்சில் பேணுகின்ற வேளையில், பொருளாதாரம் நடுத்தர காலத்தில் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைவதற்கு உதவும் நோக்குடன் இசைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts: